Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 மே 22 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
குற்றச்செயல்களை தடுப்பதற்கு பொலிஸாருக்கு பொதுமக்கள் உதவ முன்வர வேண்டுமென அக்கரைப்பற்று பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.டி. ஹேமந்த, வெள்ளிக்கிழமை (22) தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பொலிஸ், பொதுமக்கள் விழிப்புக்குழு ஏற்பாடு செய்த ஆலோனைக்குழு கூட்டம், இன்று காலை அக்கரைப்பற்று பொத்துவில் வீதியிலுள்ள ஏசியன் சிப் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் பிரதம அதீதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
'கடற்கரை, மைதானங்கள், வயல்வெளிகள் பொதுஇடங்கள் போன்றவற்றில் மதுபானம் அருந்துபவர்கள் அதிகரித்து சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, இவைகளை தடுப்பதற்கு சகல பொதுமக்களும் இளைஞர்களும் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கி உதவினால் நாங்கள் குற்றவாளிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்' எனத் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்கள் பாடசாலை விட்டு வீடு திரும்பும் நேரங்களிலும் இரவு வேளைகளிலும் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் ஆகவே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் (இளைஞர்கள்) தேவையில்லாமல் வீதிகளில் நிற்பதை தவிர்க்க மிகுந்த கவனம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இவ்விடயங்களை அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் பள்ளிவாசல்களிலும் கோயில்களிலும் ஒலிபெருக்கி மூலம் அறிவப்பதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அக்கரைப்பற்று பொலிஸ் பொதுமக்கள் விழிப்புக்குழுவைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள பிரதிநிதிகள், அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏம்.ஏ.றாஸீக் மற்றும் பொலிஸ் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவின் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago