2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வடிகானிலிருந்து மீட்ட சிசுவுக்காக இருவர் முன்வருகை

Suganthini Ratnam   / 2015 மே 22 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோளாவில் பிரதேசத்திலுள்ள  வடிகான் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆண் சிசுவொன்றை தாங்கள் கொண்டுசென்று வளர்ப்பதற்கு பெண்கள் இருவர் முன்வந்துள்ளனர்.

வடிகானிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை கைவிடப்பட்ட நிலையில்  மீட்கப்பட்ட இந்த ஆண் சிசு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக    அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

சிசு இருந்த இடத்தில் பலர் கூடியபோதிலும், அச்சம் காரணமாக அச்சிசுவை தூக்குவதற்கு எவரும் முன்வரவில்லை. இருந்தபோதிலும், மேற்படி பெண்கள் இருவரும் தங்களின்  தற்துணிவு காரணமாக சிசுவை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.  

இந்த நிலையில், இந்த சிசுவை மீட்ட பெண்கள் இருவரும் தாங்கள் கொண்டுசென்று   வளர்ப்பதாக கூறி தங்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாரிடம் கோரியுள்ளனர். இருப்பினும்,  சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரே இது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .