Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Sudharshini / 2015 மே 23 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றிய நான்கு சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர்கள் எதுவிதமான காரணங்களுமின்றி, கடந்த 25ஆம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் வியாழக்கிழமை (21) பணிப்பகிஷ்கரிபில் ஈடுபட்டனர்.
குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றிய தாதியர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட போதும் அவர்களுக்கு பதிலாக தாதியர்கள் குறித்த வெற்றிடத்துக்கு நியமிக்கப்படாமையை அடுத்தே மேற்படி பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
மாகாண சுகாதாரப் பணிப்பாளரின் உறுதி மொழியை அடுத்து, வெள்ளிக்கிழமை பணிபகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது.
அதேவேளை, மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் இருவர் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலைக்கும் மற்றும் இருவர் புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எமது வைத்தியசாலையில் 64 தாதியர்கள் கடமையாற்றி வருகின்றனர். இவர்களில் ஐந்து பேர் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள். எனவே, தற்போது கடமைபுரியும் 60 தாதிய உத்தியோகத்தர்களில் ஒருவரே சிரேஷ்ட உத்தியோத்தராவார்.
எனவே, சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையினால் ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
எனினும் இதுபற்றி எமக்கு எதுவிதமான பதில்களும் வழங்கப்படவில்லை என தாதியர்கள் குறிப்பிட்டனர்.
குறித்த பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இடமாற்றப்பட்டுள்ள தாதியர்களின்; இடமாற்றத்தை இரத்து செய்வதாகவும் அதுதொடர்பான கடிதம் திங்கட்கிழமை காலை தொலைநகல் மூலம் அனுப்பி வைப்படும் என மாகாண சுகாதாரப் பணிப்பாளர் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக முன்னெடுக்கவிருந்த பகிஷ்கரிப்பை தற்காலிகமாகக் கைவிட்டு, வைத்தியசாலை ஊழியர்கள் கடமைகளுக்கு திரும்பியதுடன் திங்கட்கிழமை உரிய நடவடிக்கைகள் இடம்பெறாவிட்டால் தொடர்ச்சியாக பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாகவும் மாஞ்சோலை வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் எச்சரித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago