2025 ஜூலை 05, சனிக்கிழமை

கோயில் உண்டியலை உடைத்த இருவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 மே 23 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல், வியாழக்கிழமை (21)  உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பட்டிமேடு கண்ணகி அம்மன் கோயில் உண்டியல் இம்மாதம் 1ஆம் திகதி இரவு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது.

இதுதொடர்பாக அப்பிரதேச மக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் இருவரும் கடந்த 20ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் திருடிய சில்லறை காசை, தாள் காசாக மாற்றிய கடை உரிமையாளர்களும் பொலிஸ் விசாரணைக்குட்படுத்தபட்ட பின்னரே இரு சந்தேக நபர்களும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குறித்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதிபதி மேற்படி தீர்ப்பை வழங்கினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .