2025 ஜூலை 05, சனிக்கிழமை

பஸ் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் பலி

A.P.Mathan   / 2015 மே 23 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்,எஸ்.கார்த்திகேசு,ரீ.கே.றஹ்மத்துல்லா,வி.சுகிர்தகுமார்

அம்பாறை மாவட்டம், பொத்துவில் ஊரணி காட்டுப் பகுதியில் இடம்பெற்ற பஸ், மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் ஸ்தலத்திலே பலியான பரிதாபகரமான சம்பவம் இன்று சனிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.
 
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோமாரி – 01ஐச் சேர்ந்த சூரியதாசன் சுஜிஸ்தன் (வயது 19), அதே இடத்தைச் சேர்ந்த ஜோகராஜா கிருபாகரன் (வயது 18) ஆகிய இரு இளைஞர்களுமே இவ்விபத்தில் பலியாகியுள்ளனர்.

பொத்துவிலில் இருந்து கோமாரி நோக்கிச் சென்றவேளை அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 
குறித்த பஸ் வண்டியின் சாரதி பொத்துவில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதுடன், உயிரிழந்த இளைஞர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .