Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Sudharshini / 2015 மே 24 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தினை கண்டித்து அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லிம் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவை கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையின் செயற்குழு உறுப்பினர்கள் சனிக்கிழமை (23) மாலை காரைதீவு பிரதேசத்தில் ஒன்று கூடிய வித்தியாவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் கண்டன அறிக்கையொன்றையும் வெளியிட்டனர்.
பாடசாலை மாணவி வித்தியாவின் கொடூரமான துஷ்;பியோக கொலையானது இன்று உலகம் முழுவதும் வருந்தத்தக்க ஒரு விடயமாக இருப்பதடன் இச்சம்பவம் மனித குலத்தினை வெட்கி தலை குனிய வைத்த வெறுக்கதக்க ஒரு தும்பியல் சம்பவமாகும்.
இச்சம்வத்துடன் தொடர்புபட்ட அனைத்து சூத்திரதாரிகளையும் விரைவாக கைது செய்வதுடன் இவர்களுக்கான தண்டனைகள் விரைவுப்படுத்தப்பட வேண்டும். இனி இவ்வாறான சம்மவங்கள் இடம்பெறாது தடுக்கும் வகையில் பக்கச்சார்பின்றி தகுந்த தண்டனைகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
இந்த கொடூரமான படுகொலையாது இந்த நாட்டில் இறுதி சம்பவமாக அமைய வேண்டும். இவ்வாறான எந்தவொரு சம்மவமும் இடம்பெறாது இருப்பதற்கு இந்த கொலையாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள்; உதாரணமாக அமைய வேண்டும்.
அத்துடன் சட்டம் சரியாக தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்கவதுடன் வன்முறைகளை மேற்கொள்ளாது அமைதியான முறையில் தமது கருத்துக்களையும் எதிர்ப்பினையும் வெளிக்காட்ட வேண்டுமென அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவை வேண்டுகோள் விடுப்பதாக அந்த கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
54 minute ago
3 hours ago
5 hours ago