2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

மாணவனையும் தகப்பனையும் தாக்கியோருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 மே 24 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் கடமை புரியும் ஊழியரான சபாரத்னம் சாமூவேல் என்பவரை தாக்கி காயமேற்படுத்திய மூன்று சந்தேக நபர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி திருமதி. ஆகிலா சனிக்கிழமை (23) உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

பிரதேச சபை ஊழியரின் மகன் தரம்-10 இல் கல்வி கற்பவர். கடந்த வெள்ளிக்கிழமை (22) பாடசாலை விட்டு வந்து பிற்பகல் 2.30 மணியளவில் மேலதிக வகுப்புக்காக துவிச்சக்கர வண்டியில் செல்லும் போது, அவருடன்  மேலதிக வகுப்பில் கற்கும் மாணவன் ஒருவரும் வயதான இன்னும் சிலரும் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கள்ளான மாணவன் வகுப்புக்கு செல்லாமல் வீடு சென்று பிரதேச சபை ஊழியரான தகப்பனிடம் கூறியுள்ளான். இதனையடுத்து இருவரும் பொலிஸில் முறையிடுவதற்காக வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் 2.45 மணியளவில் சென்று கொண்டிருக்கும் போது, மகனை தாக்கிய குழவினர் தகப்பனாரையும் மகனையும் பொல்லாலும் கோடாரியாலும் அடித்து காயமேற்படுத்தியுள்ளனர்.

காயமடைந்த இருவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அக்கரைப்பற்று பொலிஸார் 3 பேரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X