2025 ஜூலை 05, சனிக்கிழமை

அலைபேசி மீள்நிரப்பல் தொடர்பில் செயலமர்வு

Sudharshini   / 2015 மே 24 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா 

பொது மக்களின் நன்மை கருதி தபால் திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அலைபேசி ஊடான மீள்நிரப்பல் சேவை தொடர்பாக அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்திட்சகர் பிரிவுக்குட்பட்ட அஞ்சல் அதிபர்களுக்கான செயலமர்வு ஞாயிற்றுக்கிழமை (24) காரைதீவு தபாலகத்தில் நடைபெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அலுவலக பிரதம நிர்வாக உத்தியோகத்தர் யூ.எல்.எம். பைஸர் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் மட்டக்களப்பு தபால் பயிற்சி கல்லூரியின் பிரதம போதனாசிரியர் என். நரேந்திரன் வளவளராக கலந்து கொண்டு விரிவுரையாற்றினார்.

இச்செயலமர்வில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 40ற்கும் மேற்பட்ட அஞ்சல் அதிபர்கள் பங்குபற்றினார்கள்.

தபால் திணைக்களம் புரட்சிகரமான மாற்றமெனான்றுக்கு அடிவைத்துள்ளது. நவீன உலகில் தமது நடவடிக்கைகளை மிகவும் இலகுவாக்கிக் கொள்வதற்காக அலைபேசி பாவனைக்கு பெருமளவான வாடிக்கையாளர்கள் முனைந்துள்ளனர். 

அதன்பிரகாரம் தற்போது அலைபேசி முன்செலுத்தும் சேவைகளை வீடுகளுக்கு வருகை தருகின்ற தபால்காரர் மூலமாக அல்லது எந்தவொரு தபால் நிலையத்திலும் மீள்நிரப்பலை மேற்கொள்ளலாமென பிரதம நிர்வாக உத்தியோகத்தர் யூ.எல்.எம். பைஸர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .