2025 ஜூலை 05, சனிக்கிழமை

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உயர்அதிகாரிகள் கல்முனை விஜயம்

Thipaan   / 2015 மே 25 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமின்  பணிப்புரையின் பேரில் நகர அபிவிருத்தி அதிகார சபையின்  உயர் அதிகாரிகள் கல்முனைப் பிரதேசத்துக்கு கடந்த சனிக்கிழமை (23) விஜயம் செய்திருந்தனர்.

இவ் அதிகாரிகள்,  கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் பிரதேசத்திலுள்ள மையவாடி, கடற்கரைப்பள்ளிவாசல் வளாகம், நூராணியா தைக்கப்பள்ளிவாசல் மையவாடி என்பவற்றுக்கு கடல்மண் இட்டு நிரப்புதல் மற்றும் கடற்கரைப்பள்ளி வாசல் முன்றலில் உள்ள கொங்கிறீட் வீதியினை இரட்டைப்பாதை அமைத்து மத்தியில் மின்கம்பங்களை நட்டு ஒளியூட்டுதல், வாகன தரிப்பிடம் அமைத்தல், இருக்கைகள்  அமைத்தல் போன்ற அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க அந்த இடங்களை பார்வையிட்டதுடன், இது  சம்பந்தமான திட்ட நகல்களை தயார்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக கல்முனை கடற்கரைப்பள்ளி முக்கியஸ்தர்களிடமும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது நகர அபிவிருத்தி திணைக்கள மேலதிக செயலாளர் பொறியியலாளர் பீ.சுரேஸ், திட்ட பணிப்பாளர் அநுர திஸநாயக, கடற்கரைப்பள்ளி நிர்வாக சபை செயலாளர் ஏ.எல்.றிஸாத் ஹாஜி, சமூகசேவையாளர் ஏ.எம்.பைரூஸ் உள்ளிட்ட நகர அபிவிருத்தி திணைக்கள உத்தியோஸ்தர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .