2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

பெரியநீலாவணை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2015 மே 25 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் கடந்த 13ஆம் திகதி, பாடசாலை மாணவி படுகொலைசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  அம்பாறை மாவட்டத்தின் கல்முனை கல்வி வலயத்துக்;குட்பட்ட  பெரியரீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மாணவர்கள், திங்கட்கிழைமை (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இப்பாடசாலை மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வார்ப்பாட்டமானது பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. சூத்திரதாரிகளுக்கு தகுந்த தண்டனையினை நீதிமன்றம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், கொலைகாரர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் செல்லக்கூடாது எனவும் நியாயமான நீதி வழங்கவேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X