2025 ஜூலை 05, சனிக்கிழமை

'வித்தியாவின் கொலை தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும்'

Thipaan   / 2015 மே 25 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அரக்கமனம் கொண்ட காமுகர்களினால் சிதைக்கப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) வெளியிடப்பட்ட கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கொடூர குற்றத்தை புரிந்தவர்களுக்கு அதியுச்ச தண்டணை வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்து மாமன்ற கட்டடத்தில் தலைவர் வே.சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்ற வித்தியாவின் ஆத்மசாந்தி வேண்டிய பிரார்த்தனையின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வித்தியாவுக்கு நிகழ்ந்த இக்கொடூர வன்புணர்வு நாட்டில் தொடர்வதற்கு சட்டம் இடமளிக்க கூடாது என்பதுடன், குற்றத்தை புரிந்தவர்களுக்கு எவ்வித கருணையும் காட்டாது அதியுச்ச தண்டனை  வழங்கப்படவேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு நடைபெற்ற ஆத்மா சாந்தி வேண்டி சுடரேற்றிய பிரார்த்தனை வழிபாடுகளில் இந்துமாமன்ற உறுப்பினர்கள் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .