Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 மே 25 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலக மனிதவள அபிவிருத்திப் பிரிவினால் மாணவர்களுக்கான 'தொழில் சவாலை வெற்றி கொள்ளல்' எனும் கருப் பொருளிலான பயிற்சிப் பட்டறை, இன்று திங்கட்கிழமை (25) அந்-நூர் மகா வித்தியாலத்தில் நடைபெற்றது.
தொழில் உருவாக்கல், மேம்படுத்தல் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு மற்றும் மனித வலு, வேலைவாய்ப்புத் திணைக்களம், உற்பத்தித் திறன் மேம்பாட்டு அமைச்சு என்பன இணைந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இதனை செயற்படுத்தி வருகின்றன.
இதன்மூலம் மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை திட்டமிட்டு தங்களின் இலக்குகளை அடைந்து ஒவ்வொருவரும் வெற்றியாளர்களாக மாறுவதுடன் ஆரோக்கியமான சமூகமொன்றை கட்டியெழுப்புவதே இதன் குறிக்கோளாகும்.
மனிதவள அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஏ.எல்.எம்.சபீக் பிரதான வளவாளராகக் கலந்துகொண்டு விளக்கமளித்ததுடன் பாடசாலை அதிபர் ஏ.எல்.கிதுறுமுகம்மட், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .