Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 மே 26 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன், வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு கோளாவில் பிரதேச வடிகான் ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆண் சிசுவின் தாய் என சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரை திங்கட்கிழமை (25) இரவு கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து கோளாவில் பிரதேசத்தில் வைத்து குறித்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலையடிவேம்பு, கோளாவில் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (22) வடிகான் ஒன்றிலிருந்து தொப்புள் கொடியுடன் கைவிடப்பட்ட நிலையில் ஆண் சிசுவொன்றை அப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கண்டெடுத்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து பொலிஸார், குறித்த சிசுவை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிறுவர் பராமரிப்புப் பிரிவில் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சிசுவை தத்தெடுத்து வளர்க்க இரு பெண்கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago