2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆயுர்வேத வைத்தியசாலையை முன்னேற்ற நடவடிக்கை

Princiya Dixci   / 2015 மே 26 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, அட்டாளைச்சேனை ஆதார ஆயுர்வேத வைத்தியசாலையை தெற்காசியாவில் முதல்தர சுகாதார வைத்திய நிலையமாக மாற்றுவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.எம்.நக்பர், செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார்.

கடந்த ஒரு வருட காலத்துக்குள் வெளிநோயாளர் பிரிவில் 24,775 பேரும் நடமாடும் வைத்திய சேவையில் 11,100 பேரும் தொற்றா நோய் பிரிவில் 3,785 பேரும் தங்கி சிகிச்சை பெற்றவர்கள் 2,240 பேரும் இவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.

அதுமாத்திரமல்லாமல், அட்டாளைச்சேனை ஆதார ஆயுர்வேத வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வெளி மாவட்டங்கள், பிரதேசங்களிலிருந்து வரும் நோயாளிகளை தாமதப்படுத்தல் அவர்களுக்கான வைத்திய சேவையை மிகக் குறுகிய நேரத்தில் வழங்கி வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிர்காலத்தில் அதிகூடிய முதல்தர வைத்திய சேவைகளை வழங்கும் வைத்தியசாலையாகவும் உற்பத்தித்திறன் சான்றிதழ் பெறுவதற்கான முதல் நிலை பெற்ற வைத்தியசாலையாகவும் மாற்றியமைக்க முழு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அட்டாளைச்சேனை ஆதார ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.எம்.நக்பர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .