2025 ஜூலை 05, சனிக்கிழமை

தற்போதைய ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள நாம் போராட வேண்டும்: ஹாபிஸ்

Sudharshini   / 2015 மே 26 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

தற்போதைய ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் சிறுபான்மை சமூகம் வீதியில் இறங்கி போராட வேண்டும். தங்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க அது வழிவகுக்கும். கடந்த முப்பது வருட யுத்தத்தின் வடு மக்கள் மனதிலிருந்து முற்று முழுதாக இன்னும் அகழவில்லை. சிறுபான்மை சமூகம்; ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் மூலம் தற்போதைய ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் இன்று (26) வினவிய போதோ அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

மீண்டும் இலங்கையில் மஹிந்தவின் ஆட்சி வர நாம் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. தற்போதைய ஜனாதிபதியின் நல்லாட்சியில் மக்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள்.

இந்த ஆட்சியைக் கொண்டு வருவதுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடினமாக உழைத்துள்ளனர். இந்த ஆட்சியைக் கொண்டுவர தோழ்க்கொடுத்த நாம் இன்னும் நம் மக்களுக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்ளவில்லை என்ற குறை இருந்து கொண்டிருக்கிறது.

எனவே, மீண்டும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரவேண்டும். இந்த அரசாங்கத்தை மீண்டும் கொண்டுவருவதுக்கு சிறுபான்மை மக்கள் உறுதியுடன் செயற்பட வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ளகிறேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .