2025 ஜூலை 05, சனிக்கிழமை

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவருக்கு அபராதம்

Kogilavani   / 2015 மே 26 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜமால்டீன்

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.முஹம்மட் பஸீல் 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் ஒரு வருடத்துக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கக் கூடாது என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு அறிவிக்குமாறும் கட்டளையிட்டார்.

நீதிமன்றத்தில் நேற்று(25) ஆஜர்படுத்திய போதே மேற்படி தீர்ப்பை வழங்கினார். அக்கரைப்பற்று 1ஆம் பிரிவைச்சேர்ந்த நபருக்கு இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி பெறும் சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்துகொண்டு மதுபோதையில் பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல், காப்புறுதிப்பத்திரம் இல்லாமல், கவனயீனமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற நிலையில் மேற்படி நபர் நேற்று திங்கட்கிழமை(25) கைதுசெய்யப்பட்டதுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .