2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

வாகரை ஊரியன்கட்டு அரசினர் பாடசலைக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு

Gavitha   / 2015 மே 26 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

லண்டன் செல்வ விநாயகர் ஆலயத்தின் ஊடாக பெறப்பட்ட நியின் மூலம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை, வாகரை ஊரியன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் இன்று செவ்வாய்க்கிழமை (26) வழங்கி வைக்கப்பட்டன.
 
பாடசாலை அதிபர் திருமதி ஜெயமலர் டிகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன் பேரவை பிரதிநிதிகள், பாடசாலை ஆசிரியர்கள் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த  உதவியை வழங்கிய மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினர், லண்டன் செல்வ விநாயகர் ஆலய நிருவாகத்தினர் ஆகியோருக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X