2025 ஜூலை 05, சனிக்கிழமை

'சமூகத்தின் தூண்களாக ஊடகவியலாளர்கள் விளங்குகின்றனர்'

Gavitha   / 2015 மே 26 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

ஊடகவியலாளர்கள் எனப்படுவோர் ஒரு சமூகத்தின் தூண்களாக விளங்குகின்றனர் என்று கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சதோச நிறுவனத்தின் பணிப்பாளருமான சி.எம்.முபீத் ஞாயிற்றுக்கிழமை (24) தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் மாதாந்த பொதுக் கூட்டமும் கௌரவிப்பு நிகழ்வும் நற்பிட்டிமுனை அல்அக்ஷா மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒரு சமூகத்தின் அபிவிருத்தியில் ஊடகவியலாளரின் பங்கு முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய விடயமாகும்.

சமூகத்தில் நடைபெறுகின்ற சீர்கேடுகளை வெளித்திரைக்கு கொண்டு சென்று அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் பாரிய பணியில் ஊடகவியலாளர்களின் செயற்பாடு அத்தியவசியமாக இன்று காணப்படுகின்றது.

இன்று ஊடகவியலாளர்கள் எமது நாட்டில் இல்லை என்றால் சமூகத்தில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் பஞ்சமா பாதங்களை எவராலும் அறிந்து கொள்ளமுடியாமல் போய்விடும். அதற்கான தீர்வினை நாம் பெற்றுக் கொள்ள முடியாது.

கடந்த ஆட்சிக்காலத்தின் போது, உண்மைகளை வெளியுலகுக்கு கொண்டு சென்ற எத்தனையோ ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர். கண் முன்னே கொலை செய்யப்பட்டனர்.  

அது மட்டுமல்லாது ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட வரலாறுகளை நாம் இலகுவில் மறந்து விடமுடியாது. கடந்த காலங்களில் உண்மைகளை எழுதும் எத்தனையோ ஊடகவியலாளர்களின் பேனா முனைகள் நசுக்கப்பட்டன. கைகள் விலங்கிடப்பட்டன உண்மைகளை எழுதுவதற்கு தயக்கம் காட்டினர்.

ஆனால் இன்று அவ்வாறான ஒரு சூழ்நிலை இந்த நாட்டில் இல்லை. இன்று நல்லாட்சி மலர்ந்துள்ளது.

கடந்த காலங்களில் உண்மைகளை எழுதிய எத்தனையோ ஊடகவியலாளர்கள் உயிர் அச்சுறுத்தப்பட்டு, கொலை மிரட்டல்களுக்கு மத்தியில் வெளிநாடு சென்ற சந்தர்ப்பங்களும் இந்த நாட்டில் நடந்தேறியது.

ஊடகவியலாளர்கள் உண்மைகளை எழுதுவதற்கு தயக்கம் காட்டத் தேவையில்லை.  சுதந்திரமாக எழுதக்கூடிய சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது.

ஊடகவியலாளர்களாகிய நீங்கள் மக்களுக்கு ஒரு விடயத்தை ஊடகங்கள் வாயிலாக சொல்லும் போது, உண்மைத் தன்மையுடனும் இலகுவில் விளங்குமளவுக்கு சுவையாகவும் தெளிவாகவும் அந்த விடயத்தை கூற வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில்; எமது சமூகத்துக்கென்று தனியான ஊடகமொன்றின் தேவைப்பாடு அவசியம் என்பதை நாம் எல்லோரும் புரி;ந்து கொள்ள வேண்டிய கட்டாயத் தேவைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இன்று எமது சமூகத்தைப் பற்றி சில ஊடகங்கள் பொய்யான தகவல்களை வழங்கி மீண்டும் இந்த நாட்டில் ஒரு இனவாதப் பிரச்சினையை தோற்றுவிப்பதற்கும் தூபமிடுவதற்கும் முயற்சிக்கின்றனர்.

அன்று பொது பலசேன என்றும் இன்று ராவன பலய என்றும் இனவாதிகள் நாட்டை சீரளிப்பதற்கும் இணங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர் குலைப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .