Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 மே 27 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
பொத்துவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள திவிநெகும பெறும் குடும்பங்களில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு திவிநெகும சமூக பாதுகாப்பு நிதியத்தினால் சிப்தொர புலமைப் பரிசில் வழங்கும் வைபவம் திங்கட்கிழமை (25) பொத்துவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு சிப்தொர புலமைப் பரிசில் நிதி வழங்கி வைக்கப்பட்டது.
பொத்துவில் பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பொத்துவில் பிரதேச செயாலாளர் என்.எம்.எம்.முஸர்ரத், பொத்துவில் உப வலய கல்விப்பணிப்பாளர் ஏ.ஏ.அப்துல் அஸீஸ், திவிநெகும சமுதாய அடிப்படை வங்கியின் உதவி முகாமையாளர் ஏ.எல்.றபீக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .