2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

'மாமரத்தை கத்தரித்தலும் பயிற்று வித்தலும்' செயற்றிட்டம்

Gavitha   / 2015 மே 27 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

'மாமரத்தை கத்தரித்தலும் பயிற்று வித்தலும்' என்ற தொனிப்பொருளில் செயற்றிட்டமொன்று அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட மாகாண விவசாய திணைகளத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை விவசாய போதனை ஆசிரியர் எஸ்.எல்.எம். அஸ்கரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மாமரங்கள் செழிப்பாக வளர்வதற்கும் அதிகப்படியான மாங்காய் விளைச்சல் அடைவதற்குமான அறிவுரைகள், செய்முறை வேலைத்திட்டங்கள் இதன் போது முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம்.நவர், பதிவாளர் எஸ்.எம்.பஸிர், விவசாய திணைக்களத்தின் கண்காணிப்பு உத்தியோகஸ்தர் டி. வடிவலகன், நிந்தவூர் வலயத்தின் விவசாய நிர்வாக உத்தியோகஸ்தர் ஏ. ரவிந்திரன், விவசாய திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட ஆசிரிய பயிலுனர்களும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .