Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 மே 28 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
புங்குதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்தும் குற்றவாளிக்கு மரணதண்டனை வழங்க வேண்டுமென கோரி, அம்பாறை காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மாணவர்கள், புதன்கிழமை (27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகததுக்கு முன்னால் அக்கரைப்பற்று கல்முனைப் பிரதான வீதியில் சுலோகங்களை ஏந்தியவாறு மாணவர்கள் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'அரசே மாணவர்களின் உரிமையைப் பாதுகாத்து, குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்கு' போன்ற சுலோகங்களை மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.
மாணவர்களால் காரைதீவு பிரதேச செயலகத்தில் மகஜரும் இதன்போது கையளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jul 2025
04 Jul 2025