2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

'தமது கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்கவில்லை'

Suganthini Ratnam   / 2015 மே 29 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண முதலமைச்;சரிடம்  வேலைவாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு  எந்தவித பதில்களும் இதுவரையில் கிடைக்கவில்லை என்று பட்டதாரிகள் அமைப்பின் நிர்வாக உறுப்பினர் எம்.திலீபன் தெரிவித்தார்.

இதற்கான  தீர்வு கிடைக்காத பட்சத்தில் தங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர்; குறிப்பிட்டார்.

கடந்த சில மாதங்களாக தங்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும் என்று  கோரி மேற்படி  பட்டதாரிகளினால் கவனயீர்ப்பு போராட்டங்களும் அடையாள உண்ணாவிரதமும் நடைபெற்று வந்தன.

இதற்கமைய இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் பொருட்டு முதலமைச்சரை கிழக்கு மாகாண சபையில் சந்திப்பதற்கான அழைப்பு கடந்த 13ஆம் திகதி  கிடைக்கப்பெற்றதாகவும் அவ் அழைப்பின் பேரில் பட்டதாரிகள் சென்றபோது சந்திக்க முடியாமல் போனதாகவும் ஏமாற்றமடைந்த பட்டதாரிகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்ததாகவும் அவர் கூறினார்.

உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்ததன் பின்னர் முதலமைச்சரின் செயலாளரால் மட்டக்களப்பு மாநகர சபையில் மறுதினம்  முதலமைச்சரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  எழுத்து மூலமான கடிதம்; வழங்கப்பட்டதாகவும் அதற்கமைய போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் பிரகாரம் முதலமைச்சருடனான சந்திப்பு இடம்பெற்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன் விரைவில் தீர்வு பெற்று கொடுப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X