2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சமூகசேவை உத்தியோகத்தரின் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 மே 29 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜி.ஏ.கபூர்

நாவிதன்வெளி பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.மதிதயன் சுட்டுகொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறையில் ஆர்ப்பட்டமொன்று நேற்று வியாழக்கிழமை(29) முன்னெடுக்கப்பட்டது.

சமூக சேவை திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர்கள் அக்கறைப்பற்றில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்துக்கு முன்னால் இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

'கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதோடு அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து' என்ற தொனிப் பொருளில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில்,  அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றும் சமூகசேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .