2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தின் சிரமதான நிகழ்வு

Princiya Dixci   / 2015 மே 29 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை (29) அட்டாளைச்சேனை கோணாவத்தை சுகாதார மத்திய நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த சிரமதான நிகழ்வில் சுகாதார நிலைய வளாகம் மற்றும் கட்டடம் ஆகியன துப்பரவு செய்யப்பட்டன.

இந்த சிரமதானத்துக்கு கோணாவத்தை ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் எஸ்.எம்.எம். ஹமீன், அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஐ.எல்.எம். ஹாஸீம் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .