2025 ஜூலை 05, சனிக்கிழமை

மனித பாவனைக்குதவாத மாட்டிறைச்சி மீட்பு

Thipaan   / 2015 மே 30 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மனித பாவனைக்குதவாத ஒரு தொகுதி  மாட்டிறைச்சி, பொதுச் சுகாதார பரிசோதகர்களால் வெள்ளிக்கிழமை (29)  கைப்பற்றப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி கடையொன்றில் விற்பனை செய்யப்படும் இறைச்சியில் ஒருவகையான புழு காணப்படுவதாக பாவனையாளர்கள் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இம்முறைப்பாட்டையடுத்து இடத்துக்;கு விரைந்த பொதுச் சுகாதார பரிசோதகர் குழு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மாட்டிறைச்சியை கைப்பற்றியுள்ளனர்.

சம்மந்தப்பட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .