2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

காட்டு யானை தாக்கி விவசாயி பலி

Sudharshini   / 2015 மே 30 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அம்பாறை, பாணம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதாகம பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார் என பாணம பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் அப்புஹாமி ஞானரெட்ண என்ற 46 வயதான விவசாயியே பலியாகியுள்ளார்.

குறித்த நபர் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது,  காட்டுப் பகுதியிலிருந்து வந்த யானை தாக்கியதையடுத்து அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக சடலம் பாணம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பாணம பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .