2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

குடும்பஸ்தர் வெட்டிக் கொலை: ஒருவர் கைது

Thipaan   / 2015 மே 30 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர்,  வெள்ளிக்கிழமை (29) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சனிக்கிழமை (24) காலை ஒருவரை கைது செய்துள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பள்ளம் கிராமத்தின் முஹம்மது அலியார் வீதியைச் சேர்ந்த சித்தீக் பௌஸர் (27 வயது) என்றழைக்கப்படும் இளம் குடும்பஸ்தர், வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.15 மணியளவில்  வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது மனைவி பிள்ளையுடன் இவர் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள், இவரை கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டு நிந்தவூர் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

குடும்பத் தகராறு காரணமாக இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்க கூடும் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .