2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

'உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்' எனும் தொனிப் பொருளில் இரத்ததான முகாம்

Sudharshini   / 2015 மே 30 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனம் 'உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்' எனும் தொனிப் பொருளில் இரத்ததான முகாமினை இன்று (30) நடத்தியது.

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் ஏ.எம்.அன்வர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் கடமையாற்றும் வைத்திய கலாநிதி கே.விவேக் தலைமையிலான வைத்தியசாலை குழுவினரும் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கி வைத்தனர் என அமைப்பின் செயலாளர் எம்.பி.ஹைதர் அலி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .