Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 மே 30 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா, ஏ.ஜே.எம்.ஹனீபா
அம்பாறை மாவட்டத்துக்கு இன்று சனிக்கிழமை (30) விஜயம் மேற்கொண்ட சமூர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸ, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடமைப்புக் கடன் மற்றும் வாழ்வாதார உதவிக் கடன் ஆகியவற்றுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
அம்பாறை தயாகமகே ஆடைத்தொழிற்சாலை கூட்ட மண்டபத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது.
இதற்கமைய தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மூலம் 1,200 பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் காசோலைகளும் திவிநெகு சமூதாய அபிவிருத்தி வங்கியினூடாக குறைந்த வட்டியிலான இலகு கடன் 598 பேருக்குமான காசோலைகளை அமைச்சர் வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் வீடமைப்பு, சமூர்த்தி பிரதி அமைச்சர் அமீர் அலி, நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அனோமா கமகே, மாகாண சபை உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .