Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 06 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து அதன் மூலம் அவர்களின் அரசியல் பலத்தை அழிப்பதே பெரும்பான்மை கட்சிகளின் நோக்காகும். இதற்காகவே அவர்கள் தமிழர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதாக கூறிக்கொண்டு ஊடுருவுகின்றனர் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற புனித பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் மற்றும் சுவாமி விபுலனந்தரின் திருவுருவச் சிலை திறப்பு விழாவும் நடைபெற்றத. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்
கடந்த கால ஆட்சியாளர்களை போன்றே தற்போதைய ஆட்சியாளர்களின் அரசியல்வாதிகளும்; தமிழர் பிரதேசங்களில் ஊடுருவி தமிழர்களின் வாக்கினை சிதறடிக்க முனைகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு என்ன செய்துள்ளது என பொய்ப்பிரசாரத்தை மேற்கொண்டு எம்மை தோற்கடிப்பதற்கு முனைகின்றனர். ஆகவே, எமது மக்கள் விழிப்புடன் செயற்பட்டு கடந்த காலத்தை போன்றே தமிழர்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றார்.
இங்கு அமைக்கப்பட்டுள்ள விபுலானந்தர் சிலை கடந்த கால ஆட்சியின்போது உடைக்கப்பட்டு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியது. இருப்பினும் எமது உதவியால் அச்சிலை மீளவும் நிறுவப்பட்டுள்ளது. அவர்களது ஆட்சி நீடித்திருந்தால் அச்சிலையை நிறுவுதற்கான உதவிகளை வழங்கிய நாமே சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள முடியுமா எனும் நிலை உருவாகி இருக்கும். ஏனெனில் அவர்களது ஆட்சியானது அடவாடித்தனமிக்கதான அரசியல்வாதிகளை கொண்டிருந்தது என்றார்.
நல்லாட்சி மலர்ந்துள்ள இந்நாட்டிலே கிழக்கு மாகாண சபையில் பங்காளியாக இருக்கின்றோhம். அதன் மூலம் இரு அமைச்சுக்களையும் பெற்றுள்றோம். இவை அனைத்தும் மக்கள் நலனுக்காகவே என்பதை கூறிக்கொள்கின்றோம். அவ்வாறு நமது மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை செயற்படுத்த முடியாமல், மக்களுக்கு எதிரான திட்டங்கள் முன்வைக்கப்படுமானால் அவற்றையும் எதிர்ப்போம் என்றார்.
பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்த ஜு மகராஜ், மாகாணசபை உறுப்பினர் ரி.கலையரசன், வலக்கல்விப்பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago