Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூலை 05 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால், ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடித்துவிடலாம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று முன்னாள் பிரதி மேயர் எம்.எம்.எம்.றிசாமின் ஏற்பாட்டில் அவரது இல்லத்தில் நேற்று (04) மாலை நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துக் களம் இறங்கினால் தாங்கள் வென்றுவிடலாம் என்று மிகத் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஒருபோதும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணையப்போவதில்லை.
இந்தக்கட்டத்தில் நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. நடந்திருக்கின்ற நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேரம் பேசும் சக்தியை உச்சக் கட்டத்துக்கு கொண்டுபோயிருக்கின்றது.
ஜனாதிபதியையும் முன்னாள் ஜனாதிபதியையும் இணைத்திருக்கின்ற சூழலில் இந்த மாற்றத்தை தக்கவைத்துக்கொள்வதென்பது உறுதிப்படுத்தவேண்டுமாக இருந்தால், இந்த மாற்றத்தை உருவாக்குவதற்கு எந்த சக்திகள் ஜனாதிபதிக்கு துணையாக இருந்தார்களோ, அந்த சக்திகளோடு ஜனாதிபதி நின்றாக வேண்டும். இல்லையென்றால், இந்த ஜனாதிபதியை அங்கிகரித்துக்கொண்டு அரசியல் செய்வதென்பது சங்கடமான ஒரு சூழலை உருவாக்கிவிடும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் நாங்களும் ஆழமாக சிந்தித்து இந்த நிலவரத்தை கையாளவேண்டியிருக்கிறது.
எனவே, இது சம்பந்தமாக மீண்டும் அவசரமாக அடுத்துவருகின்ற ஓரிரு தினங்களில் தீவிரமாகப் பேசவேண்டியிருக்கிறது. கட்சியினுடைய அதி உயர்பீடம் கூடி இது தொடர்பான இறுதித் தீர்மானத்துக்குகு வரவுள்ளோம்' என்றார்.
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Oct 2025
02 Oct 2025