2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன

Thipaan   / 2015 ஜூலை 22 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளார் எச். அப்துல் சத்தார், புதன்கிழமை (22)  தெரிவித்தார்.

கலை கலாசார பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடம், இஸ்லாமிய அரபு மொழி பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் பொறியியல் பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகளே ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 05 மணிக்கு முன்னர் தத்தமது விடுதிகளுக்கு சமூகம் தருமாறும் பதிவாளர் அறிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X