Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணையில் வீடொன்றுடன் கூடிய கடைத்தொகுதிக்கு திங்கட்கிழமை (17) இரவு இனந்தெரியாதோரினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால், கடையின் முன் கதவுப்பகுதி தீப்பிடித்துள்ளது.
வீட்டில் தான் உறங்கிக்கொண்டிருந்ததாகவும் இதன்போது, திடீர் என்று கேட்ட சத்தத்தை தொடர்ந்து எழும்பிவந்து பார்த்தபோது கதவு எரிந்துகொண்டிருந்தது. இந்த தீயை அயலவர்களின் உதவியுடன் அணைத்ததாகவும் அவ்வீட்டு உரிமையாளர் கூறினார்.
இந்த தீ விபத்து தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .