2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

3 நாட்களாக மூழ்கும் மீன்பிடி படகு

Freelancer   / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.அஷ்ரப்கான்  


கல்முனை பிரதேச கடலில் மீன்பிடி படகொன்று, கடந்த 3 நாட்களாக மூழ்கிக் கொண்டிருக்கின்றது. அதனை மீட்க்கும் முயற்சி கைகூடவில்லை என்பதனால் பிரதேச மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

நீரோட்டம் காரணமாக, கல்முனை கடல் பிரதேசத்திலிருந்து சாய்ந்தமருது பிரதேசம் வரை மூழ்கிய நிலையில் அடித்து வரப்பட்டு, தற்போது சாய்ந்தமரு பிரதேச கடலில் சுமார் 400 மீற்றர் தொலைவில், முழுவதும் மூழ்கும் நிலையில் காணப்படுகிறது.
 
கல்முனையை சேர்ந்த படகு உரிமையாளர் உள்ளிட்ட குழுவினர், படகினை மீட்கும் பணியில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வந்தாலும் அம்முயற்சி கைகூடவில்லை. சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான  மீன்பிடிப் படகே இவ்வாறு முழ்கும் நிலையில் காணப்படுவது சுட்டிக்காட்டத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .