2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

3 மாநகர சபை உறுப்பினர்கள் ஊருக்கு துரோகம் இழைக்கிறார்கள்

A.P.Mathan   / 2013 நவம்பர் 15 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்
 
நற்பிட்டிமுனை ஊரின் மூன்று மாநகர சபை உறுப்பினர்களும் ஊருக்கு துரோகம் செய்கின்றனர் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
 
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவருமான அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவினால் 49 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட கல்முனை மாநகரசபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை அஷ்ரப் விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கு, இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னும் விளையாட்டு வீரர்களின் பாவனைக்கு பயன்படுத்தப்படாமலிருந்து வருகின்றது.
 
இன்று அந்த பார்வையாளர் அரங்கில் சமூகத்திற்கு முரணான செயல்கள் இடம்பெற்று வருகின்றன. விளையாட்டு வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்குமான அரங்கை மது, சூதுக்கான மத்திய நிலையமாக மாற்றியுள்ளனர். மைதானம் மழை நீரால் சேறும் சகதியுமாக மாடுகள் மேயும் மேய்ச்சல் தரையாக மாறியுள்ளது.
 
இவற்றுக்கெல்லாம் பொறுப்புக் கூறவேண்டிய கல்முனை மாநகர சபை நிருவாகம் பொறுப்பற்ற முறையில் நடந்து வருகின்றது. நற்பிட்டிமுனையில் இருந்து அந்த மக்கள் போட்ட வாக்குப் பிச்சையில் வீராப்புப் பேசும் மூன்று மாநகர சபை உறுப்பினர்களே இந்த அநீதிக்கு நீங்கள் சொல்லும் பதில்தான் என்ன?
 
அதாவுல்லாவின் நிதி என்பதற்காக கவனம் எடுக்காமல் இருந்தால் நீங்கள் மூவரும் இந்த கிராமத்துக்கு செய்யும் பெரும் துரோகத் தனமான செயல் இதுவாகும் என மக்கள் விசனம் தெரிவித்தனர்.

  Comments - 0

  • VALLARASU.COM Saturday, 16 November 2013 03:49 PM

    அந்த ஆதவனும் ஆயிரம் விளக்கும் எங்கே? சுமார் 32000 வாக்குகளை பெற்ற தம்பி எங்கே? அதாவுல்லா கட்டிய கட்டிடம் நாங்கள் தொடமாட்டோம் என்றால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு மைதானம் அமைத்து கொடுங்கள் பார்ப்போம். முயாது, அதாவுல்லா கட்டிய கட்டிடத்தில் உங்களின் ஆட்சி சபை நடக்குதே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .