Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2021 ஜனவரி 20 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
றாசிக் நபாயிஸ்
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பெண்கள் மற்றும் ஆரம்பப் பிரிவுக்குப் பொறுப்பான அதிபர் முகையதீன் முஸம்மில், தனது 34 வருட கால கல்விச் சேவையிலிருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) ஓய்வு பெறுகின்றார்.
இப்றாலெப்பை முகையதீன் - முஹம்மது இஸ்மாயில் சாபிறா தம்பதிக்கு 1961/01/25 அன்று பிறந்த முகையதீன் முஸம்மில், தனது ஆரம்ப மற்றும் இடை நிலைக் கல்வியை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் பெற்றார்.
அத்துடன், 1980ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகி வணிகத்துறையில் பட்டம் பெற்றார்.
1987ஆம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இணைந்து, கல்முனை மஹ்மூத் பாலிகா பெண்கள் கல்லூரியில் தனது முதல் நியமனத்தை பெற்று, அங்கு 07 வருடங்கள் பணியாற்றினார். பின்னர், 1993ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்று, பெரியநீலாவணை புலவர் மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் கடமையாற்றினார்.
அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு நற்பிட்டிமுனை, அல்-அக்ஸா வித்தியாலயத்தில் 2 வருடங்களும் 1996ஆம் ஆண்டு மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியிலும் 1998ஆம் ஆண்டு கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலயத்திலும் 2001ஆம் ஆண்டு கல்முனை அல்-பஹ்ரியா வித்தியாலயத்திலும் இடமாற்றம் பெற்று கல்விப் பணியை முன்னெடுத்திருந்தார்.
2005ஆம் ஆண்டு கல்முனை அல்-பஹ்ரியா வித்தியாலய உயர் தர மாணவர்களுக்கு வர்த்தகப் பிரிவை ஆரம்பிப்பதற்கு அயராது பாடுபட்டு வெற்றியும் கண்டார்.
2009ஆம் ஆண்டு மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் இணைந்து தனது ஆசிரியர் பணியை சிறப்பாக செய்யும் வேளையில் அவரின் திறமைகளைக் கண்ட அதிபர், கா.பொ.த.சாதாரண பிரிவுக்கான பகுதித் தலைவர் பொறுப்பைக் கொடுத்த போது, தனது பணிகளை சிறப்பாக நிறைவேற்றிக் காட்டினார்.
03/10/2012ஆம் ஆண்டு தரம் II அதிபர் சேவையில் நியமனம் பெற்று, மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பிரதி அதிபராகவும், பெண்கள் மற்றும் ஆரம்பப் பிரிவுக்கு பொறுப்பான அதிபராகவும் கடந்த 08 வருட காலமாக சிறப்பாக கடமையாற்றிய நிலையில் 01/01/2020ஆம் ஆண்டு தரம் I அதிபர் சேவையில் தகுதி பெற்றார்.
இவரின் அதிபர் சேவைக்காலப் பகுதியில் பல சவால்களை எதிர்கொண்டு, அல்-மனார் மத்திய கல்லூரியின் கல்வி வளர்ச்சி, பௌதீக வள அபிவிருத்தி மற்றும் ஏனைய செயற்பாட்டிலும் மிகவும் அர்ப்பணிப்புடன் பங்களிப்புச் செய்து வந்துள்ளார்.
குறிப்பாக பெண்கள் ஆரம்பப் பிரிவின் கல்வி வளர்ச்சியிலும் பெளதீக வள அபிவிருத்தியிலும் மிகவும் காத்திரமான பங்களிப்பை வழங்கியமையால், பாடசாலையின் அபிவிருத்திச் சபையிலும் பெற்றோர் மத்தியிலும் சிறந்த நன்மதிப்பைக் கொண்டுள்ளார்.
தனது அயராத முயற்சியின் ஊடாக கல்விப் பணிமனை, பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் போன்றோரின் ஒத்துழைப்பின் மூலம், பெண்கள் மற்றும் ஆரம்ப பிரிவில் கனிஷ்ட பேன்ட் வாத்தியக் குழு, முதலுதவிக் குழு, சுற்றாடல் கழகம், விஞ்ஞான ஆய்வு கூடம், நூலகம் மற்றும் கணிக் கூடம் என்பவற்றையும் உருவாக்கியதுடன், மாணவர்கள் இணைப்பாட விதான செயற்பாடுகளில் திறமைகளை மேலோங்கச் செய்ய பூரண ஒத்துழைப்பையும் வழங்கி வந்தார்.
இப்படியாக அல்-மனார் மத்திய கல்லூரியின் சகல வளர்ச்சிக்கும் அதிபர் முகையதீன் முஸம்மில்தனது முழுமையான பங்களிப்பை தனது சேவைக் காலத்துக்குள் வழங்கியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
30 minute ago
47 minute ago