Freelancer / 2024 ஓகஸ்ட் 24 , பி.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து பஸ் இங்கினியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவாலஹிந்த பகுதியில் விபத்துக்குள்ளாகியது.
அம்பாறை பஸ் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் கொழும்பு நோக்கி புறப்பட்ட இ.போ.ச.பஸ் சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பஸ் பாதையை விட்டு விலகி மரத்தில் மோதியுள்ளது.
இந்த நிலையில், பயணிகள் உடனடியாக பஸ் சாரதியை இங்கினியாகல வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்த பஸ்ஸில் 40 பேர் பயணித்த போதிலும் ஒருவருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். R
40 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
2 hours ago