Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 23 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
கிழக்கு மாகாணத்தில் 4,500 மில்லியன் ரூபா செலவில் வீதிகள் புனரமைப்பு செய்யப்படவுள்ளதாக கிழக்கு மாகாண நெடுஞ்சாலைகள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
ஜெய்காவின் நிதி உதவியுடன் மூன்று வருடத்திற்குள் இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் கீழ் வீதிகள் கொங்றீட் வீதிகளாக புனரமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் உதுமாலெப்பை தெரிவித்தார்.
இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவின் கீழ் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 3,500 மில்லியன் ரூபா செலவிலும் அம்பாறை மாவட்டத்தில் 2,000 மில்லியன் ரூபா செலவிலும் வீதிகள் புனரமைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
16 minute ago
49 minute ago
54 minute ago
naheebam Monday, 24 January 2011 04:30 PM
வீதி அபிவிருத்தி என்கின்ற பேரில் தற்போது உரிய வடிகால் வசதிகளின்றி கொங்கிறீட் இலான பாதைகள் இடப்படுகின்றன. பாதைகள் செப்பனிடும்போது கவனிக்க வேண்டிய பொது நிருமான விதிமுறைகளோஇ வீதியோர சேவைகளோ கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. முழு அகலத்திற்குமாக கொங்கிறீட் இடப்படுவதில்லை. வீதிகளின் உயரம் கூடிக்கொண்டு போகின்றவேளையில்இ குடிமனைகளும் அதனை சூழவுள்ள காணிகளும் வடிகாலைமப்புகளுமின்றி தாழ் பிரதேசங்களாக மாறுகின்றன. அண்மைக் காலங்களில் அடிக்கடி கிழக்கு மாகான குடிமனைகள் நீரில் மூழ்கிப்போவது இதற்கு சிறந்த உதாரணமாகும்.
Reply : 0 0
naheebam Monday, 24 January 2011 04:57 PM
மேலும்இ அபிவிருத்திகள் மூலம் பொதுமக்கள் நன்மைகளடைய வேண்டுமே தவிரஇ அழிவுகளுக்குள்ளக கூடாது. குறைபாடுகளுள்ள பல அபிவிருத்திகளைவிட, நிறைவான சில அபிவிருத்திகள், மக்களுக்கும் நம் தேசத்துக்கும் சிறந்த நன்மைகளை உருவாகும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
49 minute ago
54 minute ago