2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

8 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன

Super User   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.மாறன்


அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினால் எட்டு பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள எட்டு பாடசாலைகளே மூடப்பட்டுள்ளன என திருக்கோவில் வலய கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார்.

வெள்ளம் ஏற்பட்டுள்ளமையினாலேயே இந்த பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. நேற்று புதன்கிழமை மூன்று பாடசாலைகளும் இன்று வியாழக்கிழமை எட்டு பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.

இந்த எட்டு பாடசாலைகளும் எப்போது திறக்கப்படும் என இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் வலய கல்வி பணிப்பாளர் சுகிர்தராஜன் தெரிவித்தார்.

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம், திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் கலவன் பாடசாலை, பரமேஸ்வரா வித்தியாலயம், தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம், கனகரெத்தினம் வித்தியாலயம், விநாயகபுரம் மகா வித்தியாலயம், கஞ்சிக்குடியாறு கணேசா வித்தியாலயம் மற்றும் கோளாவில் பெருநாவலர் வித்தியாலயம் ஆகியனவே மூடப்பட்டுள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டார்.



  Comments - 0

  • jasath Thursday, 14 February 2013 04:17 PM

    இதற்கு யார் நஷ்ட ஈடு தாரது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X