2025 மே 12, திங்கட்கிழமை

WP NF 7666 இலக்க பஸ் பயணிகளின் கவனத்துக்கு

Princiya Dixci   / 2020 நவம்பர் 01 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

ஓக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று, கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த WP NF 7666 என்ற இலக்கத்தையுடைய தனியார் பஸ்ஸில் பயணித்தவர்கள் உடனடியாக தமக்கு அருகிலுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களைத் தொடர்புகொள்ளுமாறு, கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.ஆர்.ஆரிப் கேட்டுக்கொண்டுள்ளார்.

பயணித்த அனைவரும் தாங்களாகவே தங்கள் குடும்பத்துடன் இம்மாதம் 09ஆம் திகதி வரை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறும் கேட்டுக்கொண்டுள்ள வைத்திய அதிகாரி,  மேற்படி தனியார் பஸ்ஸில் பயணித்தோர் குறித்த விவரங்களைத் தத்தமது பொதுச் சுகாதார பரிசோதகருக்குத் தெரியப்படுத்தத் தவறும் பட்சத்தில் 0777258376 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறும் கேட்டுள்ளார்.

இதேவேளை, மேற்படி பஸ்ஸில் பயணித்த 35 பேரில் 16 பேரே, பொதுச் சுகாதார பரிசோதகர்களைத் தொடர்புகொண்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் ஏனையோரை, பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X