R.Tharaniya / 2025 ஏப்ரல் 09 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் ஒவ்வொரு நாட்டிலும் கொலைகள் நடக்கின்றன. இது நாகரீகம் தொடங்கிய காலத்திலிருந்து நடந்து வருகிறது. நாகரிகத்தின் தொடக்கத்திலும், இடைக்காலம் வரையிலும், கொலைதான் உலகில் மிகவும் பொதுவான குற்றமாக இருந்தது. நமது நாட்டை பொறுத்தவரையில் ஒவ்வொரு நாளும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை எப்படியாவது ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெறுகிறது.
பெரும்பாலும் பாதாள உலகக் கோஷ்டியினர், போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு இடையிலேயே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பரஸ்பரம் இடம்பெறுகின்றது.
அவ்வாறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், வெளிநாடுகளில் இருக்கும், இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்கள் என கூறப்படும் நபர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. அதாவது பலிக்குப் பலி என்ற அடிப்படையில், கொல்லப்படுகின்றன. சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் இறுதி கிரியையை எங்கு நடத்த வேண்டும்.
என்பது தொடர்பில், அலைபேசியின் ஊடாக அறிவுறுத்தப்படுகிறது. அந்தளவுக்குப் பாதாள உலகக் கோஷ்டியினரின் அட்டூழியங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
1971ஆம் ஆண்டு எழுச்சியின் போது, பெண்களைக் கொல்லும் வழக்கம் சமூக மயமாக்கப்பட்டது. அதற்கான இழிவான பெருமை அன்று ஆட்சியிலிருந்த அரசாங்கத்திற்குச் சொந்தமானது.
1983இல் தொடங்கிய இனப் போருக்குப் பிறகு, கொலை செய்வது வீட்டு வேலையாக மாறியது. 88-89 பயங்கரவாதத்தின் போது, மக்களைக் கொல்வது கண்காட்சியாகியது.
அதாவது, கொல்லப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களின் உடல்கள் பல்வேறு வடிவங்களில் கரி குவியல்களாக மாற்றப்படுவதும், அவற்றைப் பார்க்க மக்கள் கூடுவதும் மிகவும் பொதுவானதாக இருந்தது. 2009ஆம் ஆண்டு போர் முடிவடைந்தவுடன், பாதாள உலகம் கொலைக் கோலை கையில் எடுத்தது.
88-89 கொடூரங்களின் போது, வன்முறைக் குழுக்கள் கொல்லப்பட்ட சிலரின் உடல்களைக் கொண்ட சவப்பெட்டிகளை முழங்காலுக்கு மேல் எடுத்துச் செல்வதைத் தடை செய்தன. பெரும்பாலும் இந்த வன்முறைக் குழுக்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராத கும்பல்களாக இருந்தன. ஒரு மனிதனைச் சுட்டுக் கொன்று, பின்னர் உடலைச் சுடுவது மிகவும் மோசமான காட்சியை உருவாக்குகிறது. இது மக்களிடையே உருவாக்கும் அதிர்ச்சியை நீண்ட காலத்திற்கு நீக்க முடியாது. தற்போது இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் சாதாரண மக்களிடத்தில் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் நபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் கைப்பற்றப்படுகின்றன. இன்னும் சிலர் கைது செய்யப்படுகின்றனர்.
அதற்குப் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. என்றாலும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்குக் குறைவே இல்லை என்றே கூறவேண்டும். இவ்வாறான சம்பவங்கள், எமது நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும், சுற்றுலாத்துறை பாதிக்கும்.
வருமானமும் குறைவடையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகையால், சட்டவிரோதமான ஆயுதங்களைக் கைப்பற்றவும், குற்றவாளிகளை அதிரடியாகக் கைது செய்து நீதியின் முன் நிறுத்தவும் நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும்.
2025.04.09
1 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago