2025 நவம்பர் 14, வெள்ளிக்கிழமை

இணைய மோசடிக்காரர்களின் வலைக்குள் சிக்கிவிடாதீர்கள்

R.Tharaniya   / 2025 நவம்பர் 10 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார நெருக்கடிக்குள் இருந்து நாடு மீளவும் எழும்பவில்லை என்றே கூறவேண்டும். அந்தளவுக்கு ஒவ்வொருவரின் கழுத்தையும் கடன் நெரித்துக் கொண்டிருக்கின்றது. கடனை திருப்பி செலுத்த முடியாதவர்கள், கடனாளியாகவே வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. உரிய நேரக்காலத்துக்குள் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்காமல் விடும் அளவுக்குப் பொருளாதாரம் பல நிறுவனங்களின் கழுத்தையும் நெரித்துள்ளது. இதனால், குடும்பங்களிலும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. 

வங்கிகள்,  அங்கீகரிக்கப்பட்ட வணிக நிறுவனங்களில் கடனுக்கு விண்ணப்பிக்க முயல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனினும், இவ்விரு நிறுவனங்களிலும் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் மட்டும் கால தாமதம் காரணமாக, இணையத்தின் ஊடாக கடனை பெறுவதில் பலரும் அக்கறை காட்டுகின்றனர்.

மக்களின் தேவைகளை அறிந்துகொண்டிருக்கும் இணைய மோசடிக்காரர்கள், அவர்களை இலகுவாக வலைக்குள் இழுத்து சிக்கவைத்து விடுகின்றனர்.  ஆரம்பத்தில் சிறிய தொகையை கடனாக வழங்கும் இவ்வாறான இணைய மோசடியாளர்கள், சிறிய வட்டியைக் காண்பித்து, பெரும் தொகையைக் கடனாகப் பெறும் வகையில் மனசை மாற்றிவிடுகின்றனர்.

ஏற்கெனவே, கடனில் இருப்பவர்கள், குறைந்த ஆவணங்கள் மட்டும் வீட்டில் இருந்தே கடனை பெறும் வசதிகளால், ஆயிரம் கணக்கில் கடனை பெற்றுவிட்டுத் திருப்பி செலுத்தமுடியாது திண்டாடுகின்றனர். சாதாரணமாக 
10 ஆயிரம் ரூபாயை இணையத்தில் கடன் வாங்கும் ஒருவர் வட்டியுடன் ஒரு இலட்சம் ரூபாயைச் செலுத்தவேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுவிடுகின்றார். 

வைப்புத்தொகையை வழங்காமல் இணையத்தின் ஊடாக கடன்களை வழங்கும் நிறுவனங்களைக் கையாள்வதற்கு அதிகாரம் இல்லை என்று இலங்கை மத்திய வங்கிக்குக் கூறியிருக்கின்றது.  இணையத்தின் ஊடாக கடன்களை வழங்கும் சில நிறுவனங்கள் 42 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலான மாதாந்திர வட்டி வீதத்தில் கடன்களை வழங்குகின்றது.

கடன்களை வழங்கும் அனைத்து நபர்களின் தேசிய அடையாள அட்டைகள், வங்கிக் கணக்குகள் போன்ற அனைத்து தகவல்களையும் இந்த நிறுவனங்கள் பெறுகின்றன, மேலும் தொடர்புடைய கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்களை அவதூறு செய்ய சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றன.

இந்த இணையத்தின் கடன் வலைக்குள் சிக்கிய பலரும் கொள்ளுப்பிட்டியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை வியாழக்கிழமை(06) அன்று நடத்தியிருந்தனர்.  சட்டம் ஒன்று இல்லாத நாட்டில் அநீதி கோலோச்சும் என்பார்கள். 

கடன் வழங்குவதற்கு சட்டத்தின் அனுமதி வழங்கப்படாத நிறுவனங்கள் அதாவது மத்திய வங்கியில் பதிவு செய்யாத அமைப்புகள் இணையத்தின் ஊடாக கடன்களை வழங்குகின்றன. கடனை செலுத்தாவின் தொழில் நிறுவனங்களுக்கும் சென்று அவமானப்படுத்திவிடுகின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X