2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கவனம் செலுத்தாவிடின் விளைவுகள் ஆபத்தானவை

Editorial   / 2024 மார்ச் 11 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து உயிரினங்களும் உணவின் மூலம் வாழ்கின்றன. அத்துடன், உணவு என்பது மனிதனின் அடிப்படைத் தேவை. அதனால் உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், உணவு பாதுகாப்பு உணவின் உயர் ஊட்டச்சத்து தரத்திற்குச் சிறப்புக் கவனம் செலுத்தவேண்டும். எப்படிச் சாப்பிடவேண்டும் என்று சொல்லப்படும் கொடுமையான விதிக்கு ஆளாகும் மக்களுக்குச் சத்தான உணவு கிடைப்பதில்லை என்பது முழு உண்மை.

உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலை கடந்த 3ஆம் திகதி நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், விலைகளைக் குறைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது மின்சாரக் கட்டணம் குறைவதே இதற்குக் காரணமாகும். இந்த நாட்டில் அரிசி விலையை அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானிக்கின்றனர்.

பஸ் கட்டணத்தை பஸ் சங்கம் முடிவு செய்கிறது. உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தால் உணவு விலை நிர்ணயிக்கப்படுகிறது. அப்படியாயின், ஒரு நாட்டுக்கு அரசாங்கம் ஏன் தேவை? என்ற கேள்வி எழுகின்றது. நாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அது செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. நாட்டில் வர்த்தக அமைச்சர் ஒருவர் இருப்பதாகக் கூறப்பட்டாலும் அமைச்சரின் பொறுப்பு என்ன என்பது தெரியவில்லை. நாம் இப்படி ஒரு திரிக்கப்பட்ட நாட்டில் வாழ்கிறோம்.

உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதீதமாக அதிகரித்துள்ளமையினால் உணவு மற்றும் பானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகச் சிற்றுண்டிச்சாலை மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்திருந்தார்.

எந்தவொரு வகையிலும் அரசாங்கம் நுகர்வுப் பொருட்களின் விலையைக் குறைத்தால் மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

சமைக்க வசதியில்லாத தங்கும் அறைகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர். மேலும், அவசரமான கால அட்டவணையின் காரணமாகக் கடைகளில் சாப்பிட்டு நாட்களைக் கடத்துபவர்கள் ஏராளம். இலட்சக்கணக்கான மக்களின் முக்கிய வாழ்வாதாரம் உணவு என்பதை மறந்துவிடக் கூடாத முக்கியமான விடயம்.

இவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும். உணவுப் பொருள்களின் விலை உயர்ந்து, மக்கள் அதிகளவில் கடைகளை விட்டு வெளியேறும் நிலையும் உள்ளது. இதனால் உணவகங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விலைவாசியை மேலும் உயர்த்தினால் உணவுத் தொழில் முற்றிலும் அழிந்துவிடும். இந்த விடயத்தில் கவனம் செலுத்தப்படாவிட்டால், விளைவுகள் ஆபத்தானவை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .