R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, செப்டெம்பர் மாதம் ஜப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழமை போன்று ஜனாதிபதி விறுவிறுவென விமான நிலையம் செல்வது, அந்நாட்டு ஜனாதிபதிகளுடன் புகைப்படமெடுத்துக் கொள்வது போன்றவற்றுடன் நின்றுவிடாமல், இலங்கை மக்களுக்கு ஆக்கபூர்வமான பலன்களை பெற்றுக் கொடுப்பதாக இந்த விஜயங்கள் அமைந்திருக்க வேண்டும்.
குறிப்பாக, அமெரிக்கா விஜயத்தின் போது, ஏற்கெனவே இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள வரி அறவீட்டை, மேலும் குறைத்துக் கொள்வது தொடர்பிலும், இலங்கையில் அமெரிக்காவின் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் தெளிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும். உட்கட்டமைப்பு, உற்பத்தி அல்லது டிஜிட்டல் சேவைகள் என எந்தத் துறையாக இருந்தாலும், நேரடி முதலீடுகளினூடாக, இலங்கையில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும்.
இரு நாடுகளுமே தொழில்நுட்ப ரீதியில் முன்னேற்கரமான நாடுகள். தற்போதைய உலகும் AI, புதுப்பிக்கத்தக்க வலு மற்றும் ரொபோட்டிக்ஸ் என முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், இலங்கையின் இளம் தலைமுறையினருக்கும் இந்த பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய வசதி வாய்ப்புகள் கிட்ட வேண்டும். ஜனாதிபதி திசாநாயக்கவின் விஜயங்களின் போது, இந்தத் துறை சார் முதலீடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
எமது தேயிலை, வாசனைத்திரவியங்கள், ஆடை உற்பத்திகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்றவற்றை இந்த இரு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன், குறைந்த வரி அறவீடுகள் மற்றும் அதிக சந்தை வாய்ப்புகள் போன்றவற்றினூடாக நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள உள்நாட்டு தொழிற்துறைகளை மீட்டு உயிர்பிக்கக்கூடியதாக இருக்கும்.
காலநிலை மாற்றம் தொடர்பிலும் இந்த விஜயங்களின் போது, ஜனாதிபதி திசாநாயக்க கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, ஜப்பானின் இடர் முன்னாயத்த நிலை நிபுணத்துவம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் காலநிலை முன்னறிவிப்பு தொழில்நுட்பம் போன்றவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் அதிகம் உள்ளன.
எமது கரையோரங்களையும், சமூகங்களையும் பாதுகாப்பதற்கு கடன்களுக்கு பதிலாக மானிய உதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டினுள் வரும் முதலீடுகள் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதாக அமைந்திருக்க வேண்டும். கொழும்பை மையமாகக் கொள்ளும் அபிவிருத்திப் பணிகளால், நாட்டின் ஏனைய பகுதிகள் முன்னேற்றமடைவதில் தாமதங்கள் ஏற்படலாம்.
எனவே, கிராமியப் பகுதிகளையும் மேம்படுத்துவதிலும், அப்பகுதிகளுக்கு அனுகூலங்கள் சென்றடைவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இந்த விஜயங்களினூடாக கைகோர்ப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் எனும் செய்தி தெளிவாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், எமது மக்களையும், எமது நாட்டின் இறையாண்மையையும் பாதுகாத்து மேம்படுத்தும் வகையில் இந்த பங்காண்மை அமைந்திருக்க வேண்டும்.
அதனை கவனத்தில் கொண்டு ஜனாதிபதி தமது உரையாடல்களை மேற்கொள்வார் என்பது ஒவ்வொரு இலங்கை குடி
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025