2025 நவம்பர் 14, வெள்ளிக்கிழமை

பருமனை கட்டுக்குள் பெண்கள் வைத்துக் கொள்ளுதல் அவசியம்

R.Tharaniya   / 2025 நவம்பர் 13 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருமனாக இருப்பவர்கள் மெலியவும், மெலிந்தவர்கள் ஓரளவுக்குப் பருமனாக மாறவும் முயற்சி செய்கின்றனர். இதனால், மெலிந்த உடல் அமைப்பைக் கொண்ட ஒரு சிலர், பருமனாகி விடுகின்றனர். பல சுற்றுப் பருமனாக இருப்பவர்கள் அந்த முயற்சியை கை விட்டுவிடுகின்றனர். இதனால், இன்னுமின்னும் பருமனாகிவருகின்றனர்.

உடல் பருமன் என்பது உடலில் கொழுப்பு அதிகம் சேர்வதால் ஏற்படும் நிலையாகும். இது இதய நோய்கள், நீரிழிவு, தூக்கக் கோளாறுகள் மற்றும் எலும்பு பிரச்சனைகள் போன்ற பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்குக் காரணமாகிறது. 

நவீன வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் பருமனைக் குறைப்பதற்கான, சில உடற்பயிற்சிகளை செய்தாலும் உணவுக் கட்டுப்பாடு இன்மையால், பருமனைக் குறைத்துக் கொள்ள முடியாமல் பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் சிக்கித் தவிக்கின்றனர்.  

பாடசாலை மாணவர்களும்   அதிக எடை கொண்டவர்களாக இன்று உள்ளனர். கடந்த காலத்தில், பல   கல்விக்கு கூடுதலாக பல பாடநெறி நடவடிக்கைகள் மற்றும் உடல் செயல்பாடுகளைச் செய்தனர், ஆனால் இன்று அதன் இயல்பு முற்றிலும் மாறிவிட்டது. தேர்வுகளில் உயர் முடிவுகளை பெறுவது மட்டுமே பல பெற்றோரின் முதன்மை குறிக்கோளாக இன்று உள்ளது. 

இந்த காரணத்திற்காக, குறிப்பாக பெண்கள் பாடசாலைக் கல்விக்கு பிறகு பிற பாடநெறி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. பருவமடைந்த பிறகு எந்த ஒரு பெண் குழந்தையும் வீட்டு வேலைகளைச் செய்து உதவி செய்தாலும், இன்றைய சமூகம் முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் உள்ளது.

“பெண்கள் முதன் முதலில் எடை அதிகரிப்பது அவர்கள் தங்கள் உயர்நிலைத் தேர்வுகளுக்குத் தயாராகும் போது தான். இன்று நிலவும் போட்டி நிறைந்த கல்வி முறையால், குழந்தைகள் அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து படிக்கிறார்கள். எனவே, அந்த நேரத்தில் சாப்பிட்ட பிறகு அவர்கள் அமர்ந்திருப்பார்கள்.

அதனால்தான் இந்த நேரத்தில் அவர்கள் எடை அதிகரிக்கிறார்கள்”
பிரசவத்திற்குப் பிறகு, பல பெண்கள் தங்கள் குழந்தையுடன் சாப்பிட 
வேண்டும் என்று நம்புவதால் அதிக உணவைச் சாப்பிடுகிறார்கள்.  அதிகம் சாப்பிடுவதன் மூலம் அவர்கள் தேவையில்லாமல் உடல் பருமனாகிறார்கள்.  

“பெண்கள் எடை அதிகரிப்பது மூன்றாவது முறையாக 40-50 வயதுக்குள் நிகழ்கிறது, அப்போது ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகப் பெண்கள் மாதவிடாய் நின்றுவிடும். இந்த நேரத்தில் நீங்கள் இதில் கவனம் செலுத்தவில்லை என்றால், அதிக எடை மற்றும் உடல் பருமனை அகற்றுவது கடினம்.”  

இலங்கையில் கிட்டத்தட்ட 3 பெண்களில் ஒருவர் (29.6 சதவீதம்) அதிக எடை கொண்டவர்களாகவும், 18-60 வயதுடைய 8 பேரில் ஒருவர் (12.6 சதவீதம்) உடல் பருமன் உள்ளவர்களாகவும் உள்ளனர். அதிக எடை மற்றும் உடல் பருமன் விகிதங்கள் 50-60 வயதுடைய பெண்களிடையே உள்ளன என தேசிய ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து கணக்கெடுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உடற்பயிற்சிகளை முறையாகச் செய்வதன் மூலம், உடலில் சேமிக்கப்படும் கொழுப்பு மற்றும் எண்ணெயை எரிப்பதன் மூலம் மிகவும் வெற்றிகரமான முடிவுகளை அடைய முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒருவரின் உயரத்திற்கு ஏற்ற எடை இருப்பது ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X