R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியப் பிரச்சினை பல ஆண்டுகளாக அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
இலங்கையில் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்றும் அவர்கள் இலட்சக்கணக்கான ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியங்கள், அதே பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஓய்வூதியச் சட்டத்தின்படியும், பின்னர் அதில் செய்யப்பட்ட சில திருத்தங்களின்படியும் வழங்கப்படுகின்றன.
தங்களுடைய ஓய்வூதியத்தை நிறுத்தினால், தன்னுயிரை மாய்த்துக்கொள்வேன் என முன்னாள் எம்.பி. நந்தன குணத்திலக்க எச்சரித்துள்ளார். அத்துடன், சர்வதேச பாராளுமன்ற அமைப்பிடம் முறையிடவுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு சுட்டிக்காட்டியிருந்தது.
ஜனவரி 2025இல், இலங்கை பாராளுமன்றம், 328 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், 189 விதவைகள் மற்றும் சார்ந்திருப்பவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கியதாகக் கூறுகிறது.
தகவலின்படி, ஜனவரியில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான 328 பேருக்கு 23,385,520.77 ரூபாய் (இருபத்தி மூன்று மில்லியன், முந்நூற்று எண்பத்தைந்தாயிரம், ஐந்நூற்று இருபது ரூபாய் எழுபத்தேழு சதம்) மற்றும் விதவைகள் மற்றும் சார்ந்திருப்பவர்களுக்கு ரூ. 11,020,666.14 (ஒரு மில்லியன், ஒரு இலட்சத்து இருபதாயிரத்து, அறுநூற்று அறுபத்தாறு ரூபாய் பதினான்கு சதம்) வழங்கப்பட்டது.
அதன்படி, 2025 ஜனவரியில் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ. 34,406,186.91. (முந்நூற்று நாற்பத்து நான்கு மில்லியன் ஆறாயிரத்து நூற்று எண்பத்தாறு மற்றும் தொண்ணூற்றொன்று) ஓய்வூதியம் பெறும் பாராளுமன்ற உறுப்பினர்களில், ஐந்து முதல் 40 ஆண்டுகள் வரை நீண்ட காலமாகப் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் உள்ளனர்.
இலங்கையின் எம்.பிக்கள் உண்மையில் ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்களா? அல்லது ஓய்வூதிய முறையில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா? நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு சட்டமும் பாராளுமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சுதந்திரத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட நமது பாராளுமன்றம், பேராசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், வணிகர்கள் மட்டுமல்ல, பல உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது.
சிலர் பொதுச் சேவைகளிலிருந்து விலகி பாராளுமன்றத்திற்கு வந்துள்ளனர்.
இலங்கை பாராளுமன்றம் வழங்கிய தகவல்களின்படி, பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கைப் பெற உரிமை உண்டு.
இந்த ஓய்வூதியம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐந்து ஓய்வூதிய அலகுகள் மூலம் வழங்கப்படுகிறது. பிரதமர்,சபாநாயகர்,அமைச்சரவை மற்றும் அமைச்சரவை அல்லாத அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்/பிரதி சபாநாயகர், துணைக் குழுத் தலைவர் மற்றும் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓய்வூதியத்தை இழக்கும் முன்னாள் எம்.பிக்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுமென சொல்லப்படுகின்றது. அவர்களுக்கு முன்னதாக, அஸ்வெசும கொடுப்பனவு பெற்றுக்கொள்ளக்கூடிய பலரும் வெறும் கையுடன் அலைந்து திரிகின்றனர். அவர்களுக்கு ஏதாவது ஏற்படுகளை செய்து கொடுத்தால் சிறப்பானதாகவே இருக்கும்.
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025