Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Janu / 2024 ஜூலை 16 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம் வியாழக்கிழமை (18) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது என ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தெரிவித்தார் .
இந்த உற்சவம் 18 நாட்கள் நடைபெற்று ஆகஸ்ட் மாதம் நான்காம் (04) திகதி அன்று தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைய உள்ளது .
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில் ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் தலைமையில் உற்சவம் நடைபெறவுள்ளது.
பிதிர்க்கடன் செலுத்துகின்ற ஆடி அமாவாசை உற்சவம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதற்காக முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தீர்த்தம் அன்று பிதிர்க்கடன் செலுத்துகின்ற வர்களுக்கு வசதியாக பத்து சிவாச்சாரியார்கள் உள்ளடக்கி பிதிர்க்கடன் நிறைவேற்றுகின்ற வேலை முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
வி.ரி.சகாதேவராஜா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
21 minute ago
53 minute ago