2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கும்பாபிஷேகம் ஆரம்பம்...

Janu   / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கிலங்கை, காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தின் பஞ்ச குண்டபக்ஷ மகா கும்பாபிஷேக பெருவிழாவிற்கான வாஸ்து சாந்தி மற்றும் கர்மாரம்பக் கிரியைகள் திங்கட்கிழமை (20) ஆரம்பமாகின.

இம் மகா கும்பாபிஷேகம் வரும் வியாழக்கிழமை (23) காலை 9.23 மணி முதல் 11.28 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேக பிரதம குரு, சிவாகம வித்யா பூஷணம், சிவாச்சார்ய திலகம், விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கிரியைகளை நடாத்துகின்றனர்.

 செவ்வாய்க்கிழமை (21) மற்றும் புதன்கிழமை(22)  எண்ணெய்க் காப்பு சாத்துதல் நிகழ்வு காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளதாக ஆலய தர்மகர்த்தாக்களான இரா. திருநாவுக்கரசு, கே. ஜெகமோகன் ஆகியோர் தெரிவித்தனர்.

கும்பாபிஷேக தினத்தன்று அமரர் பரமலிங்கம் குடும்பத்தினரின் உபயத்தில் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிஷேக திருவிழாக்கள் நடைபெற்று, இறுதியில் சங்காபிஷேகத்துடன் விழா நிறைவடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வி.ரி. சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .