2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பேச்சியம்மாள் ஆலய மானம்பூ உற்சவம்

Mayu   / 2024 ஒக்டோபர் 14 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

அராலி மேற்கு நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தில், நவராத்திரி விரதத்தின் இறுதி நாளான மானம்பூ உற்சவம் சனிக்கிழமை (12)  வெகு சிறப்பாக நடைபெற்றது.

மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பேச்சியம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் பேச்சியம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, வாழை வெட்டு நடைபெற்றது.

கிரியைகளை துஷ்யந்தக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X