2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

பழந்தோட்ட பிள்ளையார் ஆலய சங்காபிஷேகம் ...

R.Tharaniya   / 2025 ஜூலை 13 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக வளாகத்தில் அமைந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும் பழந்தோட்ட பிள்ளையார் ஆலய வருடாந்த சங்காபிஷேக பூஜை நிகழ்வுகளானது  பிரதேச செயலாளர்  உ. உதயஶ்ரீதர் தலைமையில்  அலுவலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன்  சனிக்கிழமை (12) மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. 

இதன் போது  பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களால் மாடித் தோட்டத்தில்  நடுகை செய்யப்பட்ட பாரம்பரிய நெல் இன அறுவடையும் சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட அன்னதான நிகழ்வும் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .